சிறப்பு

சிதம்பரம் என்றால்கோயில் என்ற சிறப்புப் பெயரைத் தாங்கிய நடராஜப் பெருமான் கோயிலையும், மதுரை என்றால் மீனாட்சி அம்மை கோயிலையும், பழனி என்றால் முருகப் பெருமான் கோயிலையும் குறிப்பது பொல நயினாதீவு என்றால் நாகபூசணி அம்பாள் கோயிலையே குறிக்கும். காரணம் இந்த ஊர்கள் எல்லாம் அந்தந்த ஊர்களிலுள்ள திருத்தலங்களால் புகழ் பெற்றவையாகும்.

ஊலகெங்கணும் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனை நாகேஸ்வரி ஆலயம் என்றும், நாகம்மாள் கோவில் என்றும் அழைப்பர், நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவு சரித்திரப் பிரசித்தி பெற்றது. மணிமேகலை என்ற காவியத்தில் வரும் மணிபல்லவத்தீவு இது தான் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

நயினாதீவினை நாகதீபம் என்றுஞ்சொல்லுவர். இது ஒரு பரிசுத்த தலமாகும். புத்தபிரான் இதனைத் தரிசித்தபடியினால் இது பௌத்தருக்கும் ஒரு பரிசுத்த தலமாகும். நாகபூஷணி அம்மன் கோயில் இருப்பதனால் இந்துக்களுக்கும் இது ஒரு பரிசுத்த தலமாகும். ஆகவே இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வருடம் முழுவதும் யாத்திரிகர்கள் வந்து செல்வதை இன்றும் காணலாம்.

ஸ்ரீ லங்காவில் இருபெரும் சமயங்களாகிய பௌத்தரையும் இந்துக்களையும், இருபெரும் சமூகங்களாகிய சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றுபடுத்திவைக்கும் திருத்தலங்கள் மூன்று உள்ளன. தேற்கே கதிர்காமம், மத்தியில் சிவனடிபாதம், படக்கே நயினாதீவு, முருகனும் சிவனும் தேவியும் இருபெரும் ச5கங்களையுமு; ஒன்றுபடுத்தும் தெய்வீகக் குடும்பமாக விளங்குகின்றனர். இந்த ஆத்மீக தத்துவத்தை உணர்ந்து கொள்ளாத அரசியல்வாதிகள் இனவாதத்தையும் சமூக விரோதத்தையும் தூண்டிவிடும் கைங்கரியங்களைப் பார்க்கும்போது மனம் மிக வேதனை அடைகின்றது.

ஐம்பெருங் காவியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் வரும் மணிமேகலை, தேவியை வழிபட்டதாகப் பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன. ஆபுத்திரன் விட்டுச்சென்ற அமுத சுரபி மணிமேகலைக்கு இங்குதான் கிடைத்தது. இது பல மகான்களுக்கும், அறிஞர்களுக்கும் புலவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் இருப்பிடமாய் அமைந்திருந்தது. ஏன்பதை யாரும் அநுபவத்தில் அறியலாம். ஆங்கு ஒரு ஆத்மீக அலை உண்டு. கதிர்காமம், செல்லச்சந்தநிதி போன்ற தலங்களில் உள்ள ஆத்மீக அலைபோன்று அங்கும் உள்ளதை எவரும் உணரலாம். ஆந்தச் சக்தியினாலேயே ஸ்ரீ லங்காவிலிருந்து மாத்திரம் அல்ல பாரத நாட்டிலிருந்தும் யாத்திரிகள் கவரப்படுகின்றார்கள்.

நயினாதீவு முற்காலத்தில் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கியது என்பதற்குப் போதிய ஆதாரங்க்ள இருக்கின்றன. ஆபுத்திரன் பிரயாணம் செய்து வந்த கப்பலே இங்கு தங்குவதற்கு ஏற்ற வசதியோடு இருந்ததென்றால் வேறு அத்தாட்சி எதுவுமே வேண்டியதில்லை. தென்னிந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்குக் கப்பல் செல்லும் பாதையில் நயினாதீவு இருந்தமையால் தமிழ்நாட்டுக் கப்பல்களும் வேற்று நாட்டுக் கப்பல்களும் இத்துறையிலேயே தங்கிச் சென்றிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு சங்கு குளிக்கும் துறைகள் இருந்ததென்பதற்கு இன்றும் அத்தாட்சி உண்டு.

இந்தியா முழுவதையுஞ் சேர்த்து நாவலத்தீவு என்று அழைத்தது போல யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதனைச் சேர்ந்த தீவுகளையும் சேநர்த்து மணிபல்லவம் என்று அழைத்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நயினாதீவுக்கு நாகதீவு, மணித்தீ என்றும் பெயர்களும் உண்டு. நயினாதீவுச் சாமியார் என்றும் அழைக்கப்பெறும் திருப்பெருந்திரு முத்துக்குமாரசுவாமிகளும் நயினை மாம்மியம் இயற்றிய வரகவி நாகமணிப் புலவர் அவர்களும், வாழ்ந்த ஊர் நயினாதீவு என்னும்போது அதற்கு ஒரு தனி மதிப்பு ஏற்படுகின்றது.