- கடமை, கண்ணியம் கட்டுப்பாடு யாவற்றையும் பேணிய பெருமகள்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
என்பது வான் புகழ் கொண்ட வாள்ளுவன் வாக்கு, இவ் வாக்கு ஏற்ப இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் அமரர் திருமதி. தையலம்மை வேலாயுதன் அவரது வாழ்வு அனைவருக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
நயினைப்பதியின் சைவ நல்லொழுக்க வழித்தோன்றலாகிய காலம் சென்ற இரகுநாதர் சரவணமுத்துவுக்கும், முத்துப்பிளைக்கும் 1914ம் ஆண்டு மாசிமாதம் 14ம் திகதியன்று நான்காவது புத்திரியாக திருமதி.தையலம்மை பிறந்ததார்.இவர் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
இவர் அழகிய தோற்றம் கொண்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்படு ஆகியவற்றை கடைபிடித்து யாவராலும் பாராட்டுப் பெற்றவர். இன, மத பேதங்களைக் கடந்து அன்பின் இருப்பிடமாய், கருணையின் வடிவமாய் நம் மத்தியில் வாழ்ந்த ஒரு பெருமகள். தையலம்மை வேலாயுதன் ஆவார். இவர் சமூக, சமய ஸ்தாபனங்களுக்கு நிதியுதவி, மதியுதவி, சரீரயுதவி யாவற்றையும் செய்து பொறுப்புணர்ச்சியும், சான்றோருக்குரிய அருங்குணங்களையும் ஒருங்கிணைந்த பெருமகளாகவே நம் மத்தியில் வாழ்ந்தார்.