நயினாதீவு அபிவிருத்தி சங்கம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

வரலாற்றுச் சிறப்புகளை ஆன்மிக வளர்ச்சியையும் இலக்கியப் பின்னணியையும் கொண்ட நயினாதீவை பன்முகப்பட்ட வளர்ச்சி காணாச் செய்து அத்தீவின் செழிப்புமிக்க வளமிக்க கிராமமாக வளம்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்குடன் 19.11.2002 இல் ஆரம்பிக்கப்பட்ட நயினாதீவு சமூக பொருளாதார , கல்வி,கலாசார அபிவிருதிச் சங்கம் அதனுடைய மூன்றாவது ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்வினை அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அதன் தலைவரும் வட கிழக்கு மாகாண கணியாமைச்சின் மேலதிக செயலாளருமாகிய ப.க.பரமலிங்கம் தலைமையில் கொண்டாடியது .சங்கீதா பூஷணம் தி.கருணாகரனின் திருமுறைப் பாராயணதுடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து நயினை பிரதிஷ்டா பூஷணம் சுவாமிநாத பரமேஸ்வரகுருக்கள் ,கொழும்பு இராமகிருஷ்ணாமிஷனின் தலைவர் ஆத்மகணாநந்தஜி ஆகியோரின் வாழ்த்துரையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் தலைவர் தம் உரையில் சங்கம் ஆரம்பிக்கபட்ட காலந்தொட்டு இன்று வரை சங்கதால் மேற்கொள்ளப்பட அபிவிருதிப் பணிகள் ,செயற்பாடுகள் என்பவற்றை விரிவாக விபரித்தார்.அவற்றுள் நயினாதீவு அரசினர் வைத்தியசாலையின் புனரமைப்பு ,ஆலங்குளம் வீதி அமைத்த பணி.ஆலங்குளம்திருத்தம் பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள், முழுமையான மின்சார வசதி இலவச மருத்துவமுகாம் என்பன குறிப்பிடத்தக்கவை.

இன் நிகழ்வின் போது, நயினாதீவிற்கு நற்பணி புரிந்தவர்களைக் கௌரவிக்கும் முகமாக முதற்கட்ட நடவடிக்கையாக வைத்திய கலாநிதி தம்பையா சோமசேகரம் சமய,சமூக,சித்தவைத்தியம் ஆகியதுறைகளில் ஆற்றிய சேவைக்காக ‘அருள்பணிச்செல்வர் “என்ற பட்டதையும் ஓய்வு பெற்ற அதிபர் குமாரசாமி சாந்தலிங்கம் சமய,சமூக கல்வி ஆகிய துறைகளில் ஆற்றிய சேவைக்காக “சமுகதொண்டர்”என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் நயினாதீவு பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைகழகத்திற்குத் தெரிவு செய்யபடுகின்ற மாணவர்களுக்கும்புலமை பரிசில்கள்வழங்கப்பட்டன .அமரர் நயினை முத்தர் இராமலிங்கம் அம்பலவாணர் புலமைப்பரிசு செல்வன் புவனேந்திரன் ஜெயரூபனுக்கும் அமரர் நயினை முத்தர்கந்தர் பொன்னம்பலம்ஞாபகார்த்த புலமைபரிசு செல்வி பழனிநாதன் ஷர்மிளாவுக்கு கலாநிதி முத்தையா கதிர்காமநாதனின் புலமைப்பரிசு செல்வி பரராஜசிங்கம் குகப்பிரியாவுக்கும் வழங்கி சிறப்பிதனர். லண்டனில் அமைத்துள்ள மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களான பொறியியலாளர் சதாசிவம், தொழிலதிபர் திவாகரன் ஆகியோர் மேற்படி ஒன்று கூடலுக்கு வருகை தந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது. வெள்ளவத்தைசைவமங்கையர் வித்தியாலய மாணவிகளின் ,நடனம் சிருஷ்டி ஆடற்கழகத்தின் தசாவதார நடனம் ஆகியன வருகைதந்திருந்தோரை கவர்தட்டுடன் அவதாரக் கலைகளாக காட்சிபடுத்தியது வியக்கதக்கதாக இருந்தது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவிருந்த பட்டிமன்றம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிலமையைக் கருத்திற் கொண்டு பிறிதொரு நாளில் நாடாதுவதுக்கு தீர்மானிக்கப்பட்டது.கொழும்பு,மற்றும் சுற்றுப்புறங்களில்இருந்தும் பெரும்பாலான நயினை மக்கள் இந்த ஒன்றுகூடலில் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கலாநிதி மா.வேதநாதன்
தினக்குரல் - 04/09/2005