அலைகடல்சூழ் கோணேசா - உன்
அருளினை நீ தர வேண்டும்
நிலையிலா உலகினிலே
நிம்மதியைத் தந்தருளு -நீ குடிகொளும்
புண்ணிய பூமியிலே வாழப்
புண்ணியங்கள் செய்தேனா ?
அம்பிகை தன எனை இங்கு
அனுப்பி வைத்தாளோ?
தாயினும் மிக்க தண்ணளி உடையவன் நீயென்று
ஞான ப்பா லுண்ட பாலகனால் பாடப்பட்டவன் நீ
தாயின் அன்பை யே ஏன் பறித்தாய் -உன்
தண்ணளியை அதிகம் தருவதற்கா?
அருளினை நீ தர வேண்டும்
நிலையிலா உலகினிலே
நிம்மதியைத் தந்தருளு -நீ குடிகொளும்
புண்ணிய பூமியிலே வாழப்
புண்ணியங்கள் செய்தேனா ?
அம்பிகை தன எனை இங்கு
அனுப்பி வைத்தாளோ?
தாயினும் மிக்க தண்ணளி உடையவன் நீயென்று
ஞான ப்பா லுண்ட பாலகனால் பாடப்பட்டவன் நீ
தாயின் அன்பை யே ஏன் பறித்தாய் -உன்
தண்ணளியை அதிகம் தருவதற்கா?
ஆக்கியவர்: நயினை நங்கை
Written by: