அழகிய ஆனைமுகனின் அண்ணனே
அம்பிகை உவந்தளித்த அருமருந் தே
ஆ னைமுகமும் பா னைவயிறும் அமையப்பெற்றவனே
ஆனந்த சாகரத்தை அளிப்பவனே
இன்னல் அகற்றும் இன்பப் பொருளே
ஈஸ்வரனும் தேவியும் உலகம் என்றவனே
ஈடில்லா மாங்கனியைப் பெற்ற வனே
உமைக்கும் இனிய மைந்தனே
உன்னடியார் துயர் துடைப்பவனே
ஊழ்வினை தீர்த்திடும் கணபதியே
ஊ மையரைப் பேசவைக்கும் குணநிதியே
எங்கும் எதிலும் நிறைந்தவனே
ஏமம் பு ரியும் இறையோனே
ஐந்து கரங்கள் உடையவனே
ஐயங்கள் அகற்றும் அறிவொளியே
ஒன்றாய் பலவாய் உள்ளவனே
ஒன்றியேன் உள்ளத்துள் உறைபவனே
ஓங்கார வடிவாய் ஆனவனே
ஓதவொரு மகாபாரதம் தந்தவனே
ஔடதம் அடி யார்க்கு உன்னருளே
ஔவியம் களைந்திடு உன்னடியவர்க்கே
அஃ தானால் உலகெலாம் மகிழ்ந் திடுமே
அஃ தே விநாயகா உன் அருட் திறமே
அம்பிகை உவந்தளித்த அருமருந் தே
ஆ னைமுகமும் பா னைவயிறும் அமையப்பெற்றவனே
ஆனந்த சாகரத்தை அளிப்பவனே
இன்னல் அகற்றும் இன்பப் பொருளே
ஈஸ்வரனும் தேவியும் உலகம் என்றவனே
ஈடில்லா மாங்கனியைப் பெற்ற வனே
உமைக்கும் இனிய மைந்தனே
உன்னடியார் துயர் துடைப்பவனே
ஊழ்வினை தீர்த்திடும் கணபதியே
ஊ மையரைப் பேசவைக்கும் குணநிதியே
எங்கும் எதிலும் நிறைந்தவனே
ஏமம் பு ரியும் இறையோனே
ஐந்து கரங்கள் உடையவனே
ஐயங்கள் அகற்றும் அறிவொளியே
ஒன்றாய் பலவாய் உள்ளவனே
ஒன்றியேன் உள்ளத்துள் உறைபவனே
ஓங்கார வடிவாய் ஆனவனே
ஓதவொரு மகாபாரதம் தந்தவனே
ஔடதம் அடி யார்க்கு உன்னருளே
ஔவியம் களைந்திடு உன்னடியவர்க்கே
அஃ தானால் உலகெலாம் மகிழ்ந் திடுமே
அஃ தே விநாயகா உன் அருட் திறமே
ஆக்கியவர்: நயினை நங்கை
Written by: