கவலைதனைத் தீர்த்து எங்கள் கண்முன்னெ வந்திடம்மா!

அகிலாண்ட நாயகியே அம்பிகையே ஆரணியே
   உலகாளும் தேவியம்மா உமையவளே வந்திடுவாய்
கடல் கடந்து வந்து உந்தன் கழல் போற்றும் அடியார்க்கு
   இடர் தீர்த்து வைத்திடுவாய் எங்கள் குல நாயகியே. (அகிலாண்ட)

புகழ்பாடும் சக்திகளில் ஒருபீடம் நயினை என்று
   புதல்வரில்லா அடியார்கள் உனைவேண்டி சாந்திசெய்வார்
அலைமோதும் ஓசையிலே அம்மன் உனைத் தாலாட்ட
   கவலைதனைத் தீர்த்து எங்கள் கண்முன்னே வந்திடம்மா. (அகிலாண்ட)

கருடன் கல்லும் பாம்பும் கதை சொல்லும் வரலாறு
   குருடன் கூடகுறைதீர்ப்பான் குலக்கொடியின் புதுமையினை
நியனையுறை நாயகியை நாளெல்லாம் தொழுது வந்தால்
   கருணை கொண்டு உயிரனைத்தும் காலமெல்லாம் காத்தருள்வாள். (அகிலாண்ட)

மணிஓசை கேட்குதம்மா தீபம் ஷ98 மேடைவரை
   இனி எமக்கு பயம் எதற்கு எங்கள் குல நாயகியே
நயினையுறை நாயகியை நாளெல்லாம் தொழுது வந்தால்
   கருணை கொண்டு உயிரனைத்தும் காலமெல்லாம் காத்தருள்வாள். (அகிலாண்ட)

ஆக்கம் : மணிராசன் ஸ்காபரோ
எழுத்துருவாக்கம் : நயினை.கொம்