நயினைக் கீதம்

போற்றிசைப்போமெங்கள் நயினை மணித்தீவை
   பொலிவுடனாமொன்று கூடி
ஏற்றம் வளருமிக எழில்திகழ் நயினையில்
   நாகம்மையுறைந்தருளாட்சி! நாகபூஷணி அம்பாளினாட்சி!
புற்றியேயவள் பாதம் தொழுதிட அயலகடல்
   கடந்திடு மடியவர்கோடி! ஆங்கு நாடிமடியவர் கோடி! (போற்றிசைப்போம்)

காவியநூல் மணிமேகலை போற்றிடும்
   மணிபல்லவமெங்கள் புகழ் தீவு
மாதவி மகள் மணிமகலை துறவறம்
   பூண்டறம் புரிந்த பொன்னாடு (போற்றிசைப்போம்)

நூல்வகை மதங்களும் சமத்துவமென்றொரு
   துத்துவமுணர்த்துது பாரீர்! ஆங்கு தர்மங்கள் வளருது பாரீர்!
நேல்மற பயிர்களம் மாவாழை பனை தெங்கும்
   சேழித்துப் பயன்தரும் காண்பீர்! (போற்றிசைப்போம்)

போறியியலாளர்கள் வைத்திய நிபுணர்கள்
   சுட்ட வல்லுநர் சிறந்தோங்கும் தீவு
அறிஞர்கள் இலிகிதர்கள் வணிகர்கள் கலைஞர்கள்
   நிறைந்து தொண்டாற்றும் தீவு (போற்றிசைப்போம்)

வாழிய நயினாதீவுக் கனடியர்
   அபிவிருத்தி(ச்) சங்கம்
வளம் பெற நயினை மேம்பட மக்கள்
   உழைத்திடும் சங்கம் என்றும் நிலைத்திடும் சங்கம்
வாழிய எங்கள் மணித்திருநாடு
   வாழிய வாழியவே!
சீலமும் கல்வியும் செல்வமும் பெருகி
   வான்புகழ் ஓங்கிடவே! நுயினை வாழிய வாழியவே!!

வாழி! வாழி! வாழி!

ஆக்கம் : நல்லையா துரைராஜா
எழுத்துருவாக்கம் : நயினை.கொம்