நயினைப் பதி

ஏழுகடல் அலைகள் தொடுகரை அமையும்
   ஏழில் பொழில் நிறைவளம் தருபதி
தொழுதிடும் நாகம் பூஜைசெய் மறைபுகழ் பெறு
   தொல்பொருள் பெரும்பதி நயினையெனும்
மழுவொடு விடையமர் மதன்ஏரி சிவனென
   மருவிய மலைமகள் பூஷணியாள் பதியென
தழுவிய தகையுறு கவிஞர்கள் பொருள்தரு
   தன்னீகரில்லா தனிச்சுவையெனும் இப்பதி வாழியவே!

குலைவள நிறைவொடு கவினுறு ஆலய நெறிவளர்
   கருநிறை புராணப் பெருங்கடலாம்
மலைமகள் இவள்தரு மணிபல்லவமாயமை
   மனநிறை அமுத சரபி பசி நீக்கிட
மலைநிறை பாலொடு காராம் பசவென
   முறையொடு கேட்ட வரமளித்திடுமுமை
சுpலையிலை இவளொரு திருநடமிடு தாயென
   சுpறப்பற அருள்தரு பதியிது வாழியவே!!

நீர்நில நிறைவளம் நிலைபெற கலைவளம்
   நீங்கா நிறை கற்பனை வளமிகு அறிவும்
பேர்பெறு பக்தர்கள் பெருநிலை அறிஙர்கள்
   பேறுடை மண்ணதாய் விளங்கும்
நேர்த்திகள் தினம் செய நேர்ந்திடும் அடியவர்
   நேரினில் நோய்பிணி நீங்கியே
தேர்விழா தனைக்கண்டு தேவியின் அருளொடு
   சேழித்திரு நயினைப் பதியிது வாழியவே!!!

எழுத்துருவாக்கம் : நயினை.கொம்