நலமோங்கு தீவு

அலைகந்த தாலாட்டும் கலை பொங்கு தீவு
   அரவன்று அன்னைக்கு மலரிட்ட தீவு
பனை தென்னை பயிரோடு வளம் சேர்க்கும் தீவு
   பல மதமும் பகையின்றி வாழுகின்ற தீவு

நாகம்மை நல்லருளால் நலம்பெருகு தீவு
   நாடிவரும் அடியவர்கள் குறைதீர்க்கும் தீவு
புத்தரொடு யேசுபிரான் புதுமைதரு தீவு
   ஆர்த்தமுற அல்லாவால் அணைத்திட்ட தீவு

சிவநெறியும் தவமுறையும் தழைத்தோங்கு தீவு
   சித்தர்களும் யோகிகளும் பிறந்திட்ட தீவு
மருத்துவமும் பொறியியலும் மலிந்திட்ட தீவு
   கருத்துறவே கவிஞர்களைத் தந்திட்ட தீவு

வேதியர்கள் சோதிடர்கள்தோன்றிட்ட தீவு
   வித்தகர்கள் வீரர்கள் விழைந்திட்ட தீவு
குத்த கடல் சூழவுள்ள எம்நயினைத் தீவு
   முத்தெடுத்து முடிசேர்க்கும் முதன்மை பெறு தீவு

அவினுடை புத்திரனால் அணிபெருகு தீவு
   அமதளிக்கும் சுரப்பியினால் பசிதீர்க்கும் தீவு
பல்வளமும் பல்கலையும் பயின்றளித்த தீவு
   பார்போற்றும் எம் நயினைப் பண்போங்கு தீவு!

ஆக்கம் : கி. தனுசியன் யா / பல்கலைக்கழகம்
எழுத்துருவாக்கம் : நயினை.கொம்