இவர் வியாபார நோக்கமாகபிரயாணம் செய்யும் காலங்களில் நகபூஷணியை தரிசிப்பது வழக்கம். இவருக்கு அம்பாள் ஐந்து தலை நாகபடத்தின் கீழ் நாகேந்திரனாக காட்சியளித்தாள். அப்போது பின்வரும் பாடலை பாடியுள்ளார்.
ஆண்ட்கொடிக ளெல்லா மொரு தலையில்
நீ சுமந்தரு ளிதலினா லல்லவோ
அம்புயப் பிரமன் படைக்கத் தொடங்கினான்
அகிலமும் சிதைவிலாமல்
புண்ட ரீகலோசன் பாதுகாக்கின்றான்
புராந்தகன் சங்கசித்துப்
புகழ் மருவுகின்றான் இணங்கி நீதயைசெய்து
அருள்புரியாதிருந்தனை யெனில்
எண்டிசைகளும் புவியுங்கிரிகளும்
எப்படி நிலைத்திருக்கும்
எவ்விதத்தினில் அந்த மூவர் தொழிலி
ஈடேறு மீசனரவிந்த் பாதத்
தொண்டர் கணிறைந்திடு மிலங்கை
நயினார்தீவு துதிசெய்யும் படியமர்ந்தோய்
சுரலோக லோகேந்திர நரலோக புவனேந்திரர்
தொழவேறு நாகேந்திரனே.
நீ சுமந்தரு ளிதலினா லல்லவோ
அம்புயப் பிரமன் படைக்கத் தொடங்கினான்
அகிலமும் சிதைவிலாமல்
புண்ட ரீகலோசன் பாதுகாக்கின்றான்
புராந்தகன் சங்கசித்துப்
புகழ் மருவுகின்றான் இணங்கி நீதயைசெய்து
அருள்புரியாதிருந்தனை யெனில்
எண்டிசைகளும் புவியுங்கிரிகளும்
எப்படி நிலைத்திருக்கும்
எவ்விதத்தினில் அந்த மூவர் தொழிலி
ஈடேறு மீசனரவிந்த் பாதத்
தொண்டர் கணிறைந்திடு மிலங்கை
நயினார்தீவு துதிசெய்யும் படியமர்ந்தோய்
சுரலோக லோகேந்திர நரலோக புவனேந்திரர்
தொழவேறு நாகேந்திரனே.
ஆக்கம் : வீராசாமிச் செட்டியார்