தனது ஞான குருவான நயினை ஸ்ரீ முத்துக்குமார சுவாமியாரின் மேல் பாடிய பாடல்

மங்கலமார் மணித்தீவில் மங்கா தோங்கும்
   மாதவனே குருநாத மணியே போற்றி
பொங்குமா கடலெனவே கருணை காட்டிப்
   புலையேனை ஆண்டு கொண்ட புனிதா போற்றி
இங்கென்ன ஏனிருத்தி இனியாய் சென்றாய்
   ஏது நான் செயவல்லேன் எந்தாய் போற்றி
தெங்குமலி நயினை நகர் நடுவகாட்டில்
   சேர்ந்திலங்கு சமாதியுறை தெய்வச் சோதி

ஸ்ரீ குருபாத தாசன்
ச .நா .கந்தையா (1969/02/27)