மேற்படி அபிவிருத்திக் கழகம் நயினை மண்ணிற்காற்றிய ஆற்றிவரும் சேவை விபரம். இக் கழகம் நயினாதீவின் தேவையினை நயினை மக்களின் பிரிதிநிதி. திரு.முத்தையா மகாலிங்கம் அவர்களின் ஆற்றுப்படுத்துதலில் வழங்கிவருகின்றது.
கல்விச் செயற்பாடுகள்
1. நயினாதீவு ஸ்ரீ கணேசா முன்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கி வருதல்.
2. நயினாதீவிலுள்ள மூன்று முன்பள்ளிகளாக ஸ்ரீ கணேசா முன்பள்ளி செல்லம் முன்பள்ளி, அம்பிகா முன்பள்ளி ஆகிய கல்விக் கழகங்களுக்கு, ஆசிரியர்கள் தலா தேவை ரூபா 3000 வழங்கி வருதல், மூன்று பாடசாலைகளுக்கும் தலா ரூபா 50000 ஆரம்ப நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
3. நயினாதீவிலுள்ள அரசினர் பாடசாலையான ஸ்ரீ நாகபூசனி வித்தியாசாலை, ஸ்ரீ கணேச கணிஸ்ட வித்தியாலயம் நயினாதீவு மகாவித்தியாலய ஆகிய பாடசாலையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமை செய்வோருக்கு மாதம் தலா 5000ஃஸ்ரீ வழங்கிவருதல்.
4. நயினாதீவுப் பாடசாலைகளிலிருந்து ஐந்தாம் ஆண்டுப் புலமை பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கு தலா ரூபா 5000 வழங்கி வருதல்.
5. நயினாதீவிலிருந்து க.பொ.த (உ.த) தோற்றி பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களுக்கு ரூபா 25000 வழங்கி வருதல்.
6. நயினாதீவு மகாவித்தியாலய விளையாட்டரங்கிறகான சுற்று மதில் அமைக்கப்பட்டுள்ளது.
7. தளபாடங்களும் அரம்பத்தில் வழங்கப்பட்டன.
பொதுப்பணி
1. நயினாதீவு 5ம் வட்டாரத்தில் சுமார் 15 பரப்புக் காணி கொள்வனவு செய்யப்பட்டு சுற்று மதில் அமைத்து அதிலுள்ள கேணி புனரமைக்கப்பட்டு, 3 பெரிய கிணறுகள் தோண்டப்பட்டு சூழவுள்ள பகுதியில் நன்நீர் மாற்றத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி பாரிய பணி என்பதுடன் நயினாதீவில் குடிநீர் பிரச்சினையில் முக்கிய மாற்றத்தினையும், மேற்கொண்டுள்ளது.
2. நயினாதீவிலுள்ள கேந்திர முக்கிய இடங்களில் 20 குடிநீர் தாங்கிகள் மக்கள் நன்நீர் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடான வேலைகளில் நயினாதீவு பிரதேச உபஅலுவலகமூலம் குடிநீர் வழங்கி வருதல்.
3. வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவர்களுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு நிதியாக ரூபா 50000 கிராம சேவையாளரின் சிபாரிசு மூலம் வழங்கி வருதல்.
4. இருதய நோய், புற்றுநோய் போன்ற பாரிய நோயினால் பாதிப்புற்றோருக்கு ரூபா 100000 லிருந்து மேற்பட்ட தொகையினை வழங்கி வருதல்.
2012ல் - இதய நோய் - 4, புற்று நோய் - 01 இவ் உதவியினைப் பெற்றுள்ளனர்.
5. நயினாதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலை சுத்திகரிப்புத் தொழிலாளி ரூபா – 5000 குடிநீர் திட்டப்பணியாளருக்கும் ரூபா 5000 வழங்கி வருதல்.
6. தைப்பொங்கலை முன்னிட்டு நயினைப் பாடசாலை சகல ஆசிரியர்களுக்கும் தலா – 1000 ரூபா வழங்கி வருகின்றது. இவற்றை விட நயினாதீவின் சில முக்கிய தேவைகளை அவ்வப்போது இனம் கண்டு பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை மனங்கொண்டு பாராட்டப்பட வேண்டியது. இத்தகைய பாரிய பணியினை மேற்கொண்டு வரும் எம்மூர் சுவிற்சலாந்து மக்களை நயினை மக்கள் செய் நன்றியுடன் வாழ்த்துகிள்றனர்.
7. நயினாதீவைப்பிறப்பிடமாகக் கொண்டு ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து இடம்பெயந்து மீள நயினாதீற்கு வந்து வாழ வந்த எம்மவர்களுக்கு (2010)ல் சுமார் ரூபா 150000 வழங்கப்பட்டுள்ளது.
பிரேரணை
நயினாதீவு மணிபல்லவ கலா மன்றத்தின் சுற்று வேலிகளில் பாதுகாப்பில்லாத நிலைமையை கருத்தில் கொண்டு விடக்குப்புற வேலியை மதிலாக கட்டித்தருமாறு (200அடி) கருணை மனுவொன்றினை முன் மொழிந்துள்ளது.
Written by:
- nayinai's blog
- Log in or register to post comments