பறி கூட்டு மீன் வாங்கி

மிக்ஸியோடு செக்ஸ்சியாய் இருந்து
ஆச்சி அம்மியில் அரைக்கையிலே ,,,,,,
அன்றொருநாள் ,,,,,,

பறி கூட்டு மீன் வாங்கி
பக்குவமாய் பதப்படுத்தி
கறி காச்ச என் ஆச்சி
காரமோடு வாசனை நல் திரவியங்கள்
ஆசையோடு அம்மியில் அரைக்கையிலே
மப்பினிலே சுழன்று வந்து
அப்பு அங்கே குழைந்து நிற்பார்
செப்புகின்ற மொழி அழகில்
மனையாளை புகழ்ந்து நிற்பார்
குச்சி விறகெடுத்து
குடிசைக்குள் அடுப்பெரித்து
சட்டியிலே வதக்கி வைத்து
சமைத்தெடுக்கும் பொழுதினிலே
முட்டி மோதி வருவார்கள்
மூத்தவனும் இளையவனும்
கட்டி அணைத்து முத்தம்
கையால் தழுவி அங்கே
உச்சியிலே அம்மாவுக்கு
உரிமையோடு கொடுப்பார்கள்
சுற்றி இருந்து உணவை
சுவைத்து உண்டு எழுந்த பின்பு
சட்டியிலே மிஞ்சியவை
உறி மேலே துயில் கொள்ளும்
தட்டியிலே பூனை ஏறி
தட்டி எடுக்க முயன்று தோற்று
தன்பாட்டில் கொட்டாவி விடும்

Written by: