ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.

தோழி - தோழியே, ஆழ்கடல்நீர் - ஆழமான கடலிலுள்ள நீரில், ஆழ அமுக்கி முகக்கினும் - நன்றாக ஆழும்படி அமுக்கி அள்ளினாலும், நாழி நால் நாழி முகவாது - ஒரு நாழியானது நான்கு நாழி தண்ணீரைத் தன்னுள்ளே கொள்ளாது. (அதுபோல பெண்களுக்கு) நிதியும் கணவனும் நேர்படினும் - செல்வமும், ஏற்ற கணவரும் வந்து வாய்த்தாலும், தம் தம் விதியின் பயனே பயன் - அவரவரது விதிப்பயனுக்குத் தக்க சுகத்தையே அநுபவிப்பர்.
நாழி - படி - ஒரு முகத்தலளவை. இலங்கையில் கொத்து எனக் குறிக்கப்படுவதும் அதுவே. ஆனால் கொத்து என்பது Qurat என்னும் ஆங்கிலச் சொல்லின் திரிபாகும்.
நால் + நாழி = நானாழி
தம் + தம் = தந்தம், தத்தம்