நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கன்மேல் எழுதுப் போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.
நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம் - நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது, கன்மேல் எழுத்துப்போல் காணும் - கல்லின் மேல் எழுதிய எழுத்தைப்போல் என்றும் நினைவில் நிற்கும், அல்லாத - நல்லார் அல்லாத, ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - அன்பில்லாத மனத்தினருக்குச் செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு நேர் - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்து மறைவது போல மறக்கப்பட்டுவிடும்.
கல் + மேல் = கன்மேல்
ஈரம் - அன்பு