நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உவக்கும் பிணம்.

நல் தாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தால் போல் - நல்ல தாமரைப் பூ நிறைந்த குளத்தை நல்ல அன்னப் பறவை தேடி அடைவதைப்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்றவர்களைக் கற்றவர்களே விரும்புவர், (அவ்வாறே) கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் - கல்வியறிவற்ற மூடரை மூடரே விரும்பிக் கொண்டாடுவர், முதுகாட்டிற் காக்கை உவக்கும் பிணம் - சுடுகாட்டிலே (நாறும்) பிணத்தையே காகம் விரும்புவது போன்று.
நல் + தாமரை = நற்றாமரை
கயம் - குளம்