நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்.

நாகம் தான் நஞ்சு உடமை அறிந்து - நாகபாம்பு தன்னிடம் விஷம் இருப்பதை அறிந்து, கரந்து உறையும் - மறைந்து வாழ்கின்றது. நீர்ப்பாம்பு அஞ்சாப் புறங்கிடக்கும் - (நஞ்சு இல்லாத) நீர்ப்பாம்பு அச்சமற்று வெளியிலே திரியும், (அவை போன்று) நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் - உள்ளத்தில் கள்ளம் உடையோர் தம்மை மறைத்துக் கொள்ள முயல்வர், கரவு இலா நெஞ்சத்தவர் கரவார் - வஞ்சகம் இல்லாத மனத்தையுடையோர் தம்மை மறைக்க மாட்டார்.
கரத்தல் - மறைத்தல்
கரவு - வஞ்சனை