கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.
மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மென்மையான வாழை மரத்துக்குத் தான் குலை தள்ளிய காய்களே யமனாகும், (அது போல) கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் - கல்வி கற்காத மனிதர்களுக்கு அறிவு படைத்தோர் கூறும் அறிவுரைகள் யமனாகும், அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - நல்லோர் அல்லாத தீயோருக்குத் தருமமே யமனாகும், (அவ்வாறே) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் கூற்றம் - கணவனது கருத்தறிந்து ஒழுகத் தெரியாத பெண்ணும் கூற்றமாகும்.