மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை
ஆம்போ (து) அவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ (து) அவளோடும் போம்.

மருவு இனிய சுற்றமும் - நெருங்கிச் சூழ்ந்துள்ள இனிய உறவினரும், வான் பொருளும் - தேடிக்குவித்த செல்வமும், நல்ல உருவும் - நல்ல உடலழகும், உயர் குலமும் எல்லாம் - உயர்ந்த குடிப் பிறப்பும் ஆகிய இவையாவும், திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் - மகாலட்சுமி வந்து கூடும் போது அவளுடனே வந்து சேரும், அவள் பிரிந்து போம்போது அவளோடும் போம் - அவள் பிரிந்து போகும் போது அவளுடனே நீங்கிப் போகும்.
மருவுதல் - அணைதல்
வான் பொருள் - உயர்ந்த செல்வம்
திருமடந்தை - திருமகள்