சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையும் குளிர்நிலழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

மரம் - மரங்களானவை, மாந்தர் குறைக்குந்தனையும் - தம்மை மனிதர் வெட்டி வீழ்த்தும் வரையும், குளிர்நிலழலைத் தந்து மறைக்கும் - வெயில் அவர்மேலே படாது தனது குளிர் நிழல் கொடுத்து மறைக்கும். (அதுபோல) தீயனவே சாந்தனையும் செய்திடினும் - தமக்கு ஒருவர் சாகும்வரையும் தீமையே செய்தாலும், அறிவுடையோர் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் - அறிவுடையோர் அவரைத் தம்மால் முடிந்தளவும் காக்க முயல்வர்.
குறைத்தல் - வெட்டுதல்.