அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் - நீண்டு கிளைகளோடு கூடி விளங்கும் பெரிய மரங்கள் யாவும், பருவத்தால் அன்றிப் பழா - அவை பழுக்கும் பருவகாலம் வந்தால் அன்றிப் பழுப்பதில்லை. (அதுபோல) ஆகும் நாள் அன்றி - நிறைவேறும் காலம் வந்தால் அன்றி, அடுத்து முயன்றாலும் - எவ்வளவு விடாமுயற்சியுடன் செயற்பட்டாலும், எடுத்த கருமங்கள் ஆகா - தொடங்கிய முயற்சிகள் நிறைவேறாவாம்.