தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொற் கேட்பது வுந்தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ (டு)
இங்கி இருப்பதுவுந் தீது.
தீயாரைக் காண்பதுவுந் தீதே - தீயவார்களைக் காண்பதும் தீமையானதே, தீயார் திருவற்ற சொற் கேட்பதுவும் தீதே - தீயவர்களின் பயனற்ற வீண்வார்த்தைகளைக் கேட்பதும் தீமையானதே, தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே - தீயவர்களின் தீய குணங்கள் பற்றி எடுத்துரைப்பதும் தீமையானதே, அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீது - அத்தீயவரோடு உறவு பூண்டு ஒழுகுவதும் தீமையே விளைக்கும்.