தத்தித் தத்தி குருவி அக்கா
முற்றத்திலே வருகிறார்
கொத்திக் கொத்திக் காயும் நெல்லைக்
குஞ்சுச் சொண்டால் தின்கிறாள்

பதுங்கித் தம்பி பிடிக்கப் போனால்
பறந்து விலகிப் போகிறாள்
இறங்கி வந்து பின்னும் நெல்லை
எடுத் தெடுத்துத் தின்கிறாள்

செட்டைக்குள்ளே சொண்டை வைத்துச்
சின்ன இறகைக் கோதுறாள்
வட்டமிட்டு வட்டமிட்டு
வளையில் வந்து குந்துறாள்