சின்ன வண்ணப்பூக்கள்
சிரிக்கும் நல்ல பூக்கள்
வண்ண வண்ணப் பூக்கள்
வந்து பாரும் பூக்கள்

சிவப்பு மஞ்சள் நீலம்
சேரும் வெள்ளை றோசா
அவற்றை மூக்கில் வைத்து
அறிவோம் நல்ல வாசம்

பூத்த நல்ல மலரைப்
பூசை செய்ய எடுப்போம்
கோத்து மாலை தொடுப்போம்
கோவிலுக்கும் கொடுப்போம்.