மாமா கொண்டு வந்தார்
மஞ்சள் நிறப்பந்து
பாமா நீலா செல்வி
பந்தடிக்க வருவார்

ஓங்கி ஓங்கி அடித்தால்
உயர்ந்து மேலே எழும்பும்
ஏந்திப் பின்னும் அடிப்போம்
எழும்பும் பந்தைப் பிடிப்போம்

உருட்டிப் பந்தை உதைப்போம்
ஓடி ஓடி எடுப்போம்
எடுத்து மேலே எறிவோம்
ஏந்தி ஏந்திக் குதிப்போம்.