
பட்டுத் துணி அம்மா
பார்த்து வாங்கி வந்தாள்
சட்டை ஒன்று தைத்தாள்
சரிகைக் கரை வைத்தாள்
பொட்டுப் பொட்டாய் நல்ல
பூக்கள் போட்ட சட்டை
தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள்
சின்னத் தங்கை வந்து
அன்பாய் அம்மா தைத்த
அழகுச் சட்டை இதுதான்
இன்பம் இன்பம் இன்பம்
இதனை நானும் அணிந்தால் .