வளைந்த சிவப்புச் சொண்டக்கா
வண்ணப் பச்சைச் சிறகக்கா
பறந்து வந்து கிளி அக்கா
பாலும் பழமும் தின் அக்கா

அழகு தமிழிற் பேசக்கா
அருமையான கிளி அக்கா
களவு வேண்டாம் உனக்கக்கா
கனியும் விதையும் தின் அக்கா

கூண்டில் உனக்குக் கிளி அக்கா
குறைகளுண்டோ சொல் அக்கா
மீண்டும் வெளியே வந்தக்கா
மெல்லத் தோளில் குந்தக்கா.