அழகுப் புள்ளி மானே
அருகில் ஓடி வா வா
பழகி விட்ட பின்னும்
பயம் எதற்கோ இன்னும்

காட்டிலும் நீ இல்லை
கடிக்கும் புலி இல்லை
வீட்டில் ஏனோ அச்சம்
விளை யாடுவோம் வா வா

குழையும் புல்லும் இருக்கு
குடிக்கத் தண்ணீர் இருக்கு
மழையும் காற்றும் கூட
வருந்திடாது ஓடி வா.