வண்ண வண்ணப் பூச்சியே
வட்டம் இட்டுப் பூக்களில்
என்ன தேடித் திரிகிறாய்
எடுக்கத் தேனோ பார்க்கிறாய்

மெல்லக் குழாயை வைக்கவும்
மெதுவாய்த் தேனை உறிஞ்சவும்
செல்ல வண்ணப் பூச்சியே
சொல்லித் தந்த தாரோ சொல்

என்ன என்ன வண்ணங்கள்
இருக்கு உந்தன் செட்டையிலே
எண்ண எண்ண ஆசை தான்
எனக்கு விரலோ போதாதே.