பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
நயினை முருகன் பிள்ளைத்தமிழில் சில பாடல்களை அதன் ஆசிரியர் படித்துக்காட்டிய போதும், மேலும் சில பாடல்களைப் படித்துப் பார்த்த போது, முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழும், அதனை அருளிய குருபரரைத் திருச்செந்தூர் முருகன் ஆட்கொண்டவாறும் நினைவுலகில் உதயமாயின.
நயினை முருகன் பிள்ளைத்தமிழில், சொல்லொலுக்கு, பொருள் அமைதி, கற்பனை, என்றின்னோரன்னவைகளில், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழின் அரிச்சுவடுகள் கண்டு, விரிவான ஒப்பியலாராட்சியொன்று எழலாம். முருகன் திருவருள் திரு சு.சி. கதிரவேலு அவர்களைப் பல்வேறு துறைகளில் நடக்கச் செய்து, செட்டிகுளம் உதவி அரசாங்க அதிபராக்கிப் பிள்ளைத் தமிழ்ப் புலவனுமாய்ப் பிரகாசிக்க செய்திருக்கின்றது.
- திருமுருகன்
செட்டி என்றும் இளையோன், தமிழ்ப் புலவன் .
அவன் திருவிளையாடலை யார் அறிவார்
கலாசாலை வீதி, திருநெல்வேலி