யாழ்ப்பாணத்திலுள்ள சைவக் கோயில்களுக்குச் சாதாரணமாக ஏற்ப்படும் நோய் அம்பாள் ஆலயத்தையும் விட்டுவிடவில்லை. ஆலய நிருவாகம் சம்பந்தமாக வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் இப்பொழுது நிர்வாகப் பொறுப்பு ஒன்பது அங்கத்தவர்களைக்கொண்ட தர்மகர்த்தா சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக ஆலய நிர்வாகஞ் சீராகவும் சிறப்பாகவும் நடைபெறுகின்றது.