ஞாலத்தின் முகமென விளங்குவதே நமது நயினையம்பதி உலக வரை படத்தை உற்று நோக்குவோர்க்கு இவை தௌ;ளிதிற் புரியும் 'பொங்கிடும் நெடுந்திரைப் புணலி - நாற்றிசையும் பொருந்த நடுமேவி உலகில் புகழ் பெருகு நயினை மாநகரினில் இருந்து அருள் செய்புனித தாயே' என அம்பிகையை வரகவி முத்துக்குமாரிப் புலவர் போற்றுதல் காண்க. உயிரனைத்தும் சொற்றாதல் உலகொடுவானும் தொழுதலால் என்றென்றும் பற்ற தாம் கருணை பொழிதலால் அன்னை பராபரி நாகபூஷணி என்பர் மகாகவி நயினை நாகமணிப் புலவர். 'கற்பக் கன்று' என்பர் அருள்மிக முத்துச்சுவாமிகள்.

நம் கிராமத்தின் பெருமை நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கலாம். ஏழு சமுத்திரங்கள் ஏழு தீவுகள் அங்கு வாழ்ந்தவர்கள் பற்றி நுண்மையான புதுமையான தகவல்கள் நிறையவே இன்று கிடைத்து வருகின்றன. சான்றாக இசைக் கிரந்தங்களின் கிடக்கை என்று போற்றப்படும் 'சங்கீத கல்பத்ருமம்' மிக அரிய பல உண்மைகளை கூறி நிற்பதை காணலாம். சப்த அரம் (ஏழ் நரம்பு) தோற்றம் பற்றிய விரிவில் சப்த தீவுகளும் அவற்றின் நடு நாயகமாக விளங்கும் 'மணித்துவீபமும்', 'மணித்தீவும்' மிக உயர்ந்தளவில் அட்டப்படுதல் காணலாம். பிராமி, வடமொழி, இரந்தம், தமிழ் ஆகிய மொழிகளில் இவ்விடயங்கள் மிக நுட்பமாக ஆழமாக காணப்படுகின்றது. இசை நரம்புகளின் 'மத்திம்' அல்லது மத்திய தானமாகவும் முக்கிய தளமாகவும் மணித்துவீபமும் அங்கு வதிறம் இசையின் மூலதேவதையும் பெருமைப்படுத்தப்படுவதில் இருந்து நமது மண் இசைத் தோற்றத்தினதும் ஒலித் தோற்றங்களதும் மூலம் என்பதும் குண்டலினியின் மூலபீடம் என்பதும் பெறப்படும்.

மணி நாகேச்வரரும் மணிநாகேஸ்வரியும் உலகில் உயிர் வர்க்கங்களும் செறிந்தும் நிறைந்தும் வாக்கின் தேவதைகளாகவும் வாழ்வினதும் அந்தானத்தினதும் மூலநிதியங்களாக இந்நூலால் போற்றப்படுவது செல்வம், கல்வி, பெருவாழ்வின் பேருக எண்ணப்படுகின்றது. மேலும் இங்கு போற்றப்படும் சக்தி இயற்கையின் மூலங்களையும் மூலவளங்களையும் ஆக்குபவனாகவும் அடக்குவபனாகவும் உடையவள் என்பதும் சுட்டப்படுகின்றது.

நமது மண்ணின் பல கலைஞர்களைக் காணும் போது ஒவ்வொருவரிடமும் எவ்வோர் மீத்திறன் மிகுந்து நிற்றல் காணலாம். அரிது கிடைத்தற்கரிய மானுடப் பிறவியில் நயினையில் பிறக்கப் புண்ணியஞ் செய்தவர்கள் பல கோடி தவங்களை இயற்றியவர்கள் ஆவர். இதுவரை வாழ்ந்து சிவகதி பெற்றவர்கள். வாழ்பவர்கள் இனிமேல் தோன்றும் பாக்கியமுடையவர்கள் இப்பத்தியில் இடம்பெறுவர். நாதயோகீஸ்வரரான ஸ்ரீமுத்துச்சாமி தீஷpதர் ஸ்ரீகாமாஷpயின் கடாஷத்தால் கங்கையில் இருந்து 'சரஸ்வதிதேவியின் திருக்கரத்தால் வீணையைப் பெற்றவர். ஸ்ரீகாமாஷp இருத்தி மணிமாலையில் 'போக - யோக மோஷம் - புரிந்தருள் ஸ்ரீமாதா புவனா த்ரியம்பகி மணி நாகபூஷணி' என நமது தாயை போற்றி நிற்றல் காண்க. புவனமீரேழையும் பூத்தும் காத்தும், கரந்தும், விளையாடல் புரியும் அன்னை அருள் வியந்தவாறும் இருந்தவாறுக் காண்க.

இராவணேஸ்வரனின் யாழில் உருகிய சிவன் அவனுக்குத் வானூரும் தேரும், வானவரும் பெறற்கரிய வாளும் கொடுத்து வந்தார்.

இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர்க்கு உலகவர் மன் தாள மீந்த 'தமிழ் இசைக்கு பெருமை தந்தவர் இவன். வாதில் நின்ற அந்தர்க்கு 'அர்ச்சனை பாட்டே யாம் மண்மேல் - நம்மைச் சொற்றமிழ் சையாற்பாடுக என்று கட்டளையிட்டவர் சிவன். எனவே இசையினதும் இசைத் தமிழினதும் பெருமைக்கு ஈடு இணையில்லை என்பதை மேற்பார்த்தீர்கள்.

நயினை மண் தலை சிறந்த இயற்றமிழ் பேராசான்களையும் இசைத்தமிழ் பேராசான்களையும் கொண்டது நயினை சுவாமி மற்றும் மகாகவி எனப் போற்றப்படும் வரகவி நாகமணிப் புலவரில் தொடங்கி பசிக்கவி இளங்கவியாம் குலம் வரையும் பெரிய வாத்தியார் சின்னக் கந்தையா வாத்தியார் உள்ளிட்ட ஆசான்கள் பலரது ஆற்றுப் படையும் சுக்திரர் ஐயாத்துரை பண்டிதர்கள் நா.கந்தசாமி முதல் பண்டிதர் வித்துவான்கள் கந்தகுகதாசன் பேராசான் சின்னக்குமாரசாமி காமாஷp சுந்தரன் பண்டிதை புனிதவதி கவிஞர் நாக.சண், கஸ்துரி என இவ்வறிஞர்கள் குழு பெரும்பாலும் நம் மண்ணில் இயற்றமிழாய்ந்த அறிஞர் பிறந்து வாழ்ந்து புகழ் படைத்ததும் நயினையம்பதியே. இசை வாண்மையில் புகழ் மிக்க சங்கீத பூஷணங்களாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகழீட்டிய திருமதி கமலாம்பிகை செல்வலிங்கம், திருமதி பார்வதி குகதாசன், திருமதி தில்லைநாயகி கனகரெத்தினம், திருமதி நீலாயதர்ஷp செல்வராசா, திரு.பாலசுப்பிரமணியம் திரு.N.V.M.நவரெத்தினம் என்பவர்களுடன் மகாலிங்கம் இராமநாதன் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கிருபாமணி இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வெளியேறிய தி.கருணாகரன் BFA திருமதி காதம்பரி இராஜேஸ்வரகுருக்கள் BFA சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வெளியேறிய கனகரத்தினம் சாரங்கன் MA, MPhil என்பவர்கள் யாவரும் நயினையம்பதியின் ந்தர்கள் ஆவர். நயினையை சேர்ந்த திரு.ப.சிவராசா, வேலாயுதம் திரு.நடராசா போன்றவர்களும் வேறு தொழில்கள் புரிந்தாலும் இசைவாணன்களாகவே மிளிர்ந்துள்ளனர்.

இலங்கைத் தமிழ் மக்களின் கலைக் கேந்திரமான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இசை விரிவுரையாளராக, சிரேஷ;ட விரிவுரை யாளராகவும் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத்துறை வளாகத்தின் தலைவராகவும் விளங்கும் சங்கீத கலாநிதி டாக்டர் N.V.M.நவரெத்தினம் (M.Phil Phd) ஈழத்தின் புகழ் பூத்த பாடகரும் நாடறிந்த இசைப் பேராசானும் ஆவார். இவர் 1973ஆம் வருடத்தில் பண்ணிசையில் அதி உயர்ந்த பட்டத்தை தமிழ் நாட்டில் பெற்றதுடன் இசைத்துறையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாம் தரப்பட்டதாரியாகவும் புகழ் பூத்த அகில இந்திய வானொலி பாடகராகவும் தெரிவு செய்யப்பட்டு நமது நாட்டுக்கும் இலங்கைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இவர் போல் இவரது குழந்தைகளும் அதி உயர் பாடகர்களாகவும் கல்வியாளர்களாகவும் விளங்குகின்றனர்.

இம்மண்ணில் விளைந்துள்ள அனைத்து இளம் வயதினரும் இவ்வாருள் ஒரு இறப்பை இடைவிடா முயற்சியால் பெற முடியும் என்பதற்கு இசைப் பேராசான் N.V.M. நவரெத்தினம் அவர்களது சாதனை ஓர் எடுத்துக்காட்டு.

இம்மண்ணின் தலை சிறந்த பேரறிஞர்கள் மூவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய மூன்று துறைகளை தலைமை என்று வழிநடாத்தி வருவது நமது மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய நினைத்தற்கரிய பெருமை. இவை அருட்சக்தியின் பேராற்றலுக்கு சிறிய எடுத்துக்காட்டு எனலாம்.

நயினையம்பதியின் மரபுவழி இசை வாணர்கள் என்றும் போற்றுதற்குரியவர்கள்.

இசையால் வசமாகா இதயமெது