Wednesday 23 / Mar 2022

திருவாளர் சோமசுந்தரம் பரமேஸ்வரன் அவர்களின் அகவை நாள் வாழ்த்துக்கள்

இரட்டஙகாலி முருகனின் குலதெய்வத் தொண்டர் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ்சின் போசகரும் கழகத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டவரும் இப்பவும் அங்கத்தவர்களை சேர்பதற்காக பெரும் ஈடுபாடு கொண்டவர் எந்த நிகழ்வும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் நின்று ஆலோசனை தரக்கூடியவர் நயினாதீவு புங்குடுதீவு கூட்டுறவுச் சங்க முகாமையாளராகவும் நயினாதீவு நாகபூஷனி அம்மன் ஆலய மின்சார முன்னாள் இயக்குனராகவும், கடமையாற்றிய பெருமைக்குரியவர் அவர் அவரது 73வது அகவைத்திருநாளை 23/3/2022 அன்று சிறப்பாக கொண்டாடினார்.


அப்பொன்னாளில் நீதியின் நேர்முகப் போராளி எனும் மதிப்பளித்து வாழ்துவதில் நயினைமக்கள் சார்பில் பெருமிதமடைகின்றோம் அவர் இன்று போல் என்றும் உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழவேண்டுமென்று நயினைத் தாயவளின் பாதம் பணிந்துவாழ்த்துவதோடு இரட்டங்காலி முருகப்பெருமானின் திருவரும் கிடைக்க வேண்டுகின்றோம் வாழ்க வளமுடன்.