கலாசார அலுவல்கள் தினைக்களகத்தினால் 29 ஆவது தடைவையாக ஏற்ற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கும் விழா கொழும்பு ரோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நேற்று முன்தினம் (15/12/2013) கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைசர் தலைமையில் நடைபெற்றது.
இலக்கியம் கலை துறையில் நீண்ட கால சேவையாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நயினை மைந்தர் திரு சுப்பிரமணியம் கனகரெத்தினம் அவர்களுக்கு கலாபூஷண விருது வழங்கப்பட்டது.
இலங்கைவானொலியில் ஞானக்களஞ்சியம், ஞானதீபம், கோபுரதரிசனம், சைவநற்சிந்தனை போன்ற நிகழ்ச்சிகளில் ஏறத்தாள இருபது வருடங்களுக்கு மேலாக சமய சொற்பொழிவாற்றியமைக்கும், பல அறத்தொண்டாற்றியமைக்கும் இலங்கை கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் உயரிய விருதான கலாபூஷணம் விருது நேற்று முன்தினம் (15/12/2013) திரு சுப்பிரமணியம் கனகரெத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அவர்களை மனதார வாழ்த்தி அவர்கள் இத்துறையில் மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல நயினை நாகபூஷணி அம்பாளை வேண்டுகின்றோம், வாழ்க வளமுடன்.
Sunday 15 / Dec 2013