உலகப் பெரும் சக்தியாகத் திகழும் நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த உயர் திருவிழா (17/06/2015) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் திருவிழாக்கள் இடபெறும்.
வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இப் பெருந்திருவிழாவானது எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வியாழக்கிழமை பூங்காவனத் திருவிழாவுடன் முடிவுறுகிறது.
17ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்ற வுள்ளது.
21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முத்துச்சப்பறமும்
23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கைலைக்காட்சியும்
25ஆம் திகதி வியாழக்கிழமை பகல் எழுந்தருளி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும்
26ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிவபூஜைக் கைலைக் காட்சியும் இரவு திருமஞ்சமும்
27ஆம் திகதி சனிக்கிழமை பகல் விசேட கருடகர்ப்ப பூஜையும், வாயுபட்சணி நாகம் வீதியுலா வரும் காட்சியும், இரவு பூந்தண்டிகையும் இடம்பெறும்.
28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனமும்,
29ஆம் திகதி திங்கட்கிழமை பகல் கைலைக்காட்சியும் இரவு சப்பறமும்
30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை தேர் பவனியும் இடம்பெறும்.
01ஆம் திகதி புதன்கிழமை காலை தீர்த்தமும் மாலை திருவூஞ்சலும் கொடியிறக்கமும் இடம்பெறும்.
02ஆம் திகதி இரவு பூங்காவனத்திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடியவர்கள் வருகை தந்து அம்பாளின் அருளைப் பெறுவீர்களாக.
ஓம் சக்தி.