அன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம் வாழும் எம் நயினை மண் உறவுகளே எம் நாட்டில் வாழும் உறவுகளே வணக்கம்.

உங்கள் பங்களிப்பில் எழுந்து நிற்கும் உங்கள் ஐயப்பன் ஆலய அழகைப்பாருங்கள், நீங்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கம்பீரமாக காட்சி தரும் 18 படி ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய மற்றும் மலையின் ஐயனார் சுப்பிரமணியப்பெருமான் கடலேடு தாலாட்டும் ஆலய எழில்கொஞ்சும் அழகுமிகு கட்சியைபாருங்கள்.

வரும் வாரம் உங்கள் ஐயப்பனுக்கு ஜீர்நோத்தாரண புனராவர்த்தன ஸ்வர்ணபந்தன பஞ்ச குண்ட பசஷ மஹா கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளதால் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து ஆலயத்தில் (07/09/2014) அன்றிலுருந்து ஆரம்பமாகும் கிரியைகள் எண்ணைக்காப்பு மற்றும் மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கவும்.

எம் அன்பான உறவுகளே நீங்கள் வழங்கிய நிதிப்பங்களிபினால் தான் இன்று ஆலயம் இவ்வளவு தூரம் எழுச்சி பெற்றிருக்கின்றது.
இவ் வளர்சிக்கு பெரிதும் உதவிய உறவுகள் அனைவருக்கும் எமது ஆலயம் சார்பான மனப்பூர்வமான நன்றிகள்.

மற்றும் இதுவரைக்கும் ஆலய திருப்பணி வேலைகளுக்கு பங்களிப்பு வழங்க முடியாதவர்கள்.

M. மகாலிங்கம்
கண.இல 74609749
இலங்கை வங்கி, நயினாதீவு

எனும் கணக்கிலக்கத்திற்கு அனுப்பி உங்கள் பங்களிப்பையும் வழங்கி ஆலய கும்பாபிஷேக நிகழ்வை சிறந்தமுறையில் நடாத்த முன்வர வேண்டும் என தங்களை மிகவும்
பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக நிகழ்வில் உங்கள் பங்களிப்பும் சேர வேண்டும் என்பது தான் எங்களின் பரிபூரணமான விருப்பம் நிதிப்பங்களிப்பு வழங்க இருக்கும் அடியவர்கள் ஆலய கும்பாபிஷேக தினத்திற்கு முன்னதாக வழங்கி உதவுங்கள்.

உங்கள் அனைவருக்கும் ஐயப்பனின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற ஐயனை தொழுது நிற்கின்றோம்.
ஓம் சாமியே சரம் ஐயப்பா...

குறிப்பு : ஆலய வளர்சிக்கு நிதிப்பங்களிப்பு வழங்கிய அனைத்து உறவுகளின் பெயர் விபரம் கணக்கறிக்கையாக ஆலய கும்பாபிஷேக நிறைவின் பின் வெளியிடப்படும்.

நன்றி
என்றும் ஐயப்பன் பணிக்காக
M குமரன், செயலாளர்.
தொடர்புக்கு .+94 776 110 804.

முத்தையா மகாலிங்கம், தலைவர்
021 321 2227 / 021 321 0597.

Forums: