கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள். பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேற்படி பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப்பேராசிரியர் இவர் என்பது பெருமைக்குரிய விடயம். கல்வித்துறைக்குக்கு அப்பாற்பட்டு இவரது ஆன்மீக செயற்பாடுகள் நாடறிந்ததே. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மரபு வழி அறங்காவலர் பரம்பரையில் உதித்த இவருக்கு அந்த அம்மன் அன்றி வேறு யார் இத்தனை திறமைகளை அருளியிருக்க முடியும்? இவரது அர்த்தம் பொதிந்த ஆன்மீக சொற்பொழிவுகளும் நற்சிந்தனைகளும் கேட்பதற்கு செவிக்கினிய விருந்தாக இருக்கும்.

1997 ஆம் ஆண்டு கொட்டகலை த.ம.வியில் உயர்தரம் கற்கும் போது எமது நவராத்திரி இறுதி நாள் பூஜையில் இவர் தான் சிறப்பு சொற்பொழிவாற்றினார். ஆன்மீகத்தில் ஆரம்பித்து தமிழ் மொழி சிறப்பை கலந்து சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் எங்கள் அனைவருக்கு அறிவு விருந்து படைத்தார். ஆர்வ மேலீட்டால் நான் மேடையின் பின்புறமாக சென்று அவருக்கு அருகில் மேடையின் ஒரு ஓரமாக நின்று அவரது பேச்சை இரசித்து கேட்டேன். கம்பீரமான, தௌிவான அவரது சாரீரம் இன்னும் எனக்குக்கேட்டுக்கொண்டே இருக்கிறது.

கல்விமான் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களுக்கு எமது இதயங்கனிந்த வாழ்த்துக்கள் !