தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷே பெருவிழாவில் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் இன்றைய தினம் கலாநிதி விருது பெற்றோர்கள்.
"சிவகாமக் கலாநிதி" என்னும் விருது பெற்றோர்:
பெங்களூர் திரு. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார்.
யாழ்ப்பாணம் நயினாதீவு திரு. வாமதேவ சிவாச்சாரியார்.
"திருமுறைக் கலாநிதி" என்னும் விருது:
நல்லூர் திரு. முருகேசு நவரத்தினம் ஓதுவார்.
"தருமை ஆதீனப் புலவர்" என்னும் விருது:
சொ. சொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்.
"பல்கலை வித்தகக் கலாநிதி" என்னும் விருது:
மறவன்புலவு க.சச்சிதானந்தம் அவர்கள்.
"நாதஸ்வரக் கலாநிதி"என்னும் விருது:
யாழ்ப்பாணம் நல்லூர் திரு.பாலமுருகன்.
"மேளக்கர்த்தா கலாநிதி" என்னும் விருது:
திருக்கோவிலூர் திரு. கல்யாணசுந்தரம்.
ஆகியோருக்கு வழங்கபெற்றது சாதரா போத்தி தங்கபதக்கம் அணிவித்து பணமுடிப்பும் வழங்கப்பெற்றது