கலாநிதி முத்தையா கதிர்காமநாதன்

Full Name: முத்தையா கதிர்காமநாதன்
Born:
Native:
Residence:
Occupation:
Education:
Awards:
Spouse:
Children:
Website:

நயினாதீவு முத்தையா தம்பதிகளின் ஒரே மகனாகப் பிறந்தார். ஆரம்ப கல்வியை சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியலாசாலையைத் தொடர்ந்து நயினாதீவு கணேச வித்தியாசாலையிலும், நயினாதீவு மகா வித்தியாலயத்திலும், தொடர்ந்து உயர் கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் 1970ஆம் ஆண்டு தொழில் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி வளர்ச்சி கண்டு வளம் பெருக்கி 2000ஆம் ஆண்டு தொழிலை நிறுத்தி சமூக, சமயத் தமிழ்த் தொண்டை முன்னெடுத்து சென்று அந்த முயற்சியில் கண்டு பல நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகிப்பதைக் காணலாம்.

1998ஆம் ஆண்டு முதல் உலகச் சைவப்பேரவையின் இலங்கைக் கிளையின் செயலாளராகவும், 2006ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதிச் செயலாளராகவும் 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராகவும் 2010முதல் இன்று வரை தலைவராகவும், 2008முதல் கொழும்பு விவேகானந்தா சபையின் துணைத் தலைவராகவும் நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அமைப்பின் ஆரம்ப கால துணைத் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சுன்னாகம் ஸ்கந்தவேராதயாக் கல்லூரியின் கொழும்புக் கிளையின் தலைவராக 2007 - 2009 பணியாற்றியுள்ளார்.

இவர் பலசர்வதேச மகா நாடுகளில் கலந்து பெருமை பெற்றவர். இவருக்கு 15 இற்கு மேலான கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது


Hony. Vice President
Nainatheevu - Socio Economic Education & Cultural Development Society

Hony. Secretary
World Saiva Council, Srilanka

Hony. Deputy Secretary
All Ceylon Hindu Cougress