நயினைக் கவிஞார் நா. க. சண்முகநாதபிள்ளை

Full Name: நா. க. சண்முகநாதபிள்ளை
Born: 03/02/1936 at Nainativu
Residence: Canada
Title: நயினைக் கவிஞார்
Occupation: Teacher
Education: BSc, SLEAS
Achievements: "Central Flag Never Fails"

பிறப்பு :- 03-02-1936 – 'கலைமாமணி வாசம்'
(யுவ வருடம் தை 21 திங்கட்கிழமை) நட்சத்திரம் மிருகசீரிடம் மகரலக்கினம் இராசி - இடபம், கலட்டிக்கிணறு – நயினாதீவு 3

ஆரம்பக்கல்வி 1941 – 1945
1. நாகபூசனி வித்தியாசாலை, நயினாதீவு
2. நாவலர் வித்தியாசாலை, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்
3. நமசிவாய வித்தியாசாலை, கொட்டடி யாழ்ப்பாணம்.

புனிததல யாத்திரை 1942 :- தென்னிந்தியத்திருக்கோவில்கள்
(தங்கை 11 மாதக் குழந்தை சிதம்பரத்தில் மரணம்)

இடைநிலைக்கல்வி 1945 – 1955 :- யாழ் மத்திய கல்லூரி
(அ) மெய்வல்லுநர் - Athletes
(ஆ) தமிழ் மன்றச் செயலாளர்.
(இ) கவிதை, கட்டுரை. பொதுத்திறமை பரிசில்கள்.

உயர்கல்வி :- சென்னைப்பல்கலைக்கழகம் - விஞ்ஞானப்பட்டதாரி (தூயவள வன கல்லூரி - திருச்சி) 1956 – 1960
(அ) மெய்வல்லுநர் தலைவர் - Athlete Captain
(ஆ) மெய்வல்லுநர் போட்டியில் சென்னைப்பல்கலைக்கழகத்தைப் பிரதி நிதித்துவைப்படுத்தியவை.
(இ) தமிழ் மன்றச் செயலாளர்
(ஈ) விஞ்ஞான மன்றச்செயலாளர்
(எ) B.A (சென்னை மாணவர் மன்றம்)சித்தி

உதவி ஆசிரியர் 1960 - 1968
1. தூயவள வன கல்லூரி – பண்டாரவளை சாரண ஆசிரியர் கொழம்பு சாரணர் பொண்விழாப் பிரநிதித்துவம்.
2. வித்தியானந்தாக்கல்லூரி – முள்ளியவளை.
3. மகா வித்தியாலயம் - நயினாதீவு ( சாரண ஆசிரியர்)

திருமணப்பதிவு : 09-12-1961
திருமணம் : 08-06-1963
மனைவி- தாய் மாமனின் தலைமகள் - குமாரசாமி – பத்மாசனிதேவி

சப்ததீவு திவ்யஐவன சங்கச் செயலாளர் 1963 - 1980 :- நயினை திருவம்பாவை – பஜனை - நல்லூர் நடை பஜனை

கவிதைப் பரிசு 3ம் இடம் :- அனைத்திலங்கைப்போட்டி – தொழிற்திணைக்களம்

நயினை விழையாட்டுக்கழகச் செயலாளர் 1963 – 1972 :- தேசியவிளையாட்டு,உள்ளுர் விளையாட்டுக்கள் எழுச்சிவிழாக்கள்.

நயினைசனசமுக நிலையச் செயலாளர் 1963 – 1975 :- செல்லம் பாலர்கழகம் அங்குரார்ப்பணம்

ஆசிரய ஆலோசகர் 1963 – 1964

பகுதித்தலைவர் :- விஞ்ஞனம்-நயினாதீவு மகாவித்தியாலயம் 1968 – 1978

மூத்த மகன் பிறப்பு :- பத்மசோதி 19-02-1964 – அச்சுவினி
இரண்டாம் மகன் பிறப்பு :- கலாநிதி – 01-06-1965 – திருவாதிரை
மூன்றாவது மகன் பிறப்பு :- அமுதபதி – 25-06-1966 உத்தரம்
நான்னாவது மகன் பிறப்பு :- பராபரன் - 17-10-1967 ரேவதி
ஐந்தாவது மகன் பிறப்பு :- உமாசுதன் 15-11-1968 உத்தரம்

காணி அன்பளிப்பு :- நயினைநன்னீர் திட்டம் 1972 (நரிதூக்கி)

கவிதைப்பரிசு 1972 :- முதலாம் இடம் - நயினை பல்லவகலாமன்றம்.

கவிஞராகப் பொன்னாடை 1972 :- நயினை பல்லவகலாமன்றம்- கலையரசு சொர்ணலிங்கம்

கவிதைப்பரிசு 2ம் இடம் 1975 :- அனைத்திலங்கைப்போட்டி நில அளவைத்திணைக்களம்-கொழும்பு

கவிதைப்போட்டி முதலாமிடம் :- அனைத்திலங்கைப்போட்டி,அரச நிறுவனத் தமிழ் இலக்கிய மாமன்றம் - கொழும்பு.

கட்டுரைப்போட்டி 2ம் இடம் :- அனைத்திலங்கைப்போட்டி,அரச நிறுவனத் தமிழ் இலக்கிய மாமன்றம்- கொழும்பு.

பதில் அதிபர் 1978 – 1982 :- நயினாதீவு மகாவித்தியாலயம்.

சாகித்திய மண்டலக் கவியரங்கம் 1975 :- கல்முனை அனைத்திலங்கைக் கவியரங்கு.

யாழ்பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரைப் பயிற்சி 1976 :- இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம் பண்பாட்டுப் பேரவை. (Cultural Heritage Sri Lanka)

1990-11-16 :- யாழ் மத்திய கல்லூரி அதிபர்
யாழ் கொத்தனி அதிபர்.

06-10-1991 :-யாழ்கோட்டம் சிறந்த அதிபர்

02-06-1991 :- மாவீரர் நாட்போட்டி
கவிதை 2ம் இடம், கட்டுரை 2ம் இடம்

04-06-1992 :- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவைச் செயலாளராகத் தெரிவு.

03-06-1996 :- ஓய்வு பெறல்

தை 1997 -1998 :- UNESCO இணைப்பாளர் யாழ் மாவட்டம்.

2002 :- வெனித்தாஸ் வானொடு ஆறுதல் பரிசு கவிதைப்போட்டி.
2ம் பரிசு கவிதைப்போட்டி அவுஸ்திரேலியா

13-12-2003 :- கனடா வருகை

2005 :- கவிதைப்போட்டி பரிசு 'உதயன்' நாளிதழ் கனடா.


தீவகப் பிள்ளைகள் பாய் வள்ளங்களில் வந்து யாழ்பாணத்திலுள்ள கல்லூரிகளில் கல்வி கற்ற காலம். நயினாதீவிலும் பல மாணாக்கர்கள் இவ்வாறு கற்றவர்கள். நயினாதீவு கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதியினருக்கு மூத்த பிள்ளையாக 03.02.1936 ம் ஆண்டு நயினாதீவில் நா.க. சண்முகம்பிள்ளை அவர்கள் பிறந்தார். இவர் ஆரம்ப கல்வியை நயினாதீவு நாகபூசனி வித்தியாசாலையிலும் இடைநிலை கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் தந்தையாருடனிருந்து கற்று வந்தார்.

சிரேஸ்ட பாடசாலைத் தராதரப்பரீட்சையில் தேறி இந்தியாவில் சென்னை கிருஸ்தவக் கல்லூரியில் விஞ்ஞானப் பட்டதாரியாகி தன் தாய் நாட்டிற்கு வந்து பதுளை சென் தோமஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியினைத் தொடர்ந்தார். இளமையில் நல்ல குருந்தூர விரைவோட்ட வீரனாகவும் நீளம் பாய்தலில் சிறந்த அடைவு மட்டத்தினைப் பெற்று யாழ் மத்திய கல்லூரியில் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். 'நல்ல வசன நடை கை வந்த வல்லாளர்'கவி பாடுவதிலும் மிக்க தேர்ச்சி பெற்றவர். இவரது கவிதைகள் பல பரிசில் பெற்றவை.'நல்ல ஆசிரியனாகவே பிறந்தவர்' Born a teacher அர்ப்பணிப்பு அந்தரங்கச்சுத்தி செயலிற்துறவி இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை. கல்வி டிப்ளோமா பரீட்சையில் தேறியதுடன் ஆசிரிய வளவாளர் தராதரமும் பெற்ற நல்ல நிர்வாகி. தலை சிறந்த மேடைப் பேச்சாளர். மாற்றலாகி நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு வந்து சேவை செய்யும் போதே அதிபர் பதவி இவரை தேடி வந்தது. இவருடனிருந்து சேவை செய்ய முடியாத ஆசிரியர் எவரும் இலங்கையில் எந்த இடத்திலும் சேவை செய்ய மாட்டார்கள். அந்தளவிற்கு மனித நேயமிக்க மனிதர். கொத்தணி அதிபராக இருந்து பணியாற்றியவருக்கு தான் படித்த கல்லூரியிலேயே அதிபர் பணி காத்திருந்தது. பலரிடர்பாடுகளுக்கு மத்தியில் யாழ் மத்திய கல்லூரியை மீள நிர்மாணித்து 'மத்தியின் கொடி நித்தியம் நிலைக்கும்' Central Flag Never Fails என்ற பாடசாலைக் கீதத்தையும் மாற்றியமைத்தார்.

எல்லோருடனும் சிலேடையாகவும் நகைச்சுவையுடனும் கலகலப்பாக பழகும் பாங்கு தனித்துவமானது கோபம் என்ற முகபாவம் என்றைக்கும் இவருக்கு இருந்ததில்லை. பணி ஓய்வு பெற்று கனடாவில் உறவினர்களுடன் இருக்கின்றார்.