Mr & Mrs. Sathasivam

Full Name:திரு. தம்பிமுத்து சதாசிவம்
Title: ஆசிரியர்
Born: 08/09/1931 & 30/01/1934
Native: நயினாதீவு, சிறீலங்கா
Residence: நயினாதீவு
Occupation: ஆசிரியர்
Education: -
Awards: -
Spouse: திருமதி. தையல்நாயகி சதாசிவம்

புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தரிவித்தல்

நயினாதீவி சின்னசிறு தீவு இத புகழ் பென்னம் பெரியது. நயினாதீவு நாகபூசணி அம்பால் ஆலயம் அறுபத்திநான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படும் மிகபிரசிதி பெற்ற ஆலயமாகும் . இங்கு வாழ்ந்த வாழும் மக்கள் எவர் மனமும் நோக ஒரு சொல் கூடப் பேச மாட்டர்கள் "நோக்கக் குலையும் அனிஞ்சம் பூ" .. மாதிரி மென்மையான சுபாவம் கொண்டவர்கள். "செவ்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பவர்கள்" பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்தவர்கள்.

இவ்வூரில் சைவ வேளாண் குலத்துதித்த வைர முது தம்பிமுத்து பர்வதிபிள்ளை தம்பதியினருக்கு அரவது மகனாக திரு சதாசிவம் அவர்கள் 1931ம் வருடம் ஐப்பசி மதம் 8ம் திகதி நயினாதீவில் பிறந்தார். ஆரம்ப கல்வியை நயினை நாகபூசணி விதியசாலையிலும் இடை நிலை கல்வியை நினை மகா விதியலயத்திலும், யா/பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்று சிரேஸ்ட்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்து. நு/ பூண்டுலோய வடக்கு பாடசாலையில் தன ஆசிரியர் சேவையை ஆரம்பித்தார்.

இங்கு இரு மரபும் தூய தமிழ் மரபில் வந்தவர்கள் இராமுப்பிள்ளை கணபதிபிள்ளையும், தியாகர் இராசமணியும் இல்லறத்தினை நல்லரமாகப் போற்றி வாழ்ந்து வந்தவர்களுக்கு தலை மகளாக 1934ம் வருடம் தை திங்கள் 30ம் திகதி தையல்நாயகி அவர்கள் பிறந்தார். ஆரம்ப கல்வியை நயினாதீவு ஸ்ரீ கணேச வித்தியசலையில் கற்றார் "விழியம் பயிரை முலையில் தெரியும்" என்றவாறு புலமையில் பொழிந்த தையல்நாயகி எல்லோராலும் "திலகவதி" என அழைக்கப்பட்டார்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து வேலணை மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து கற்று யாழ் கனகரெத்தினம் மகாவித்தியாலயத்தில் சிரேஸ்ட தராதரக் கல்வியைப் பெற்றபின் தனது 19ம் வயதில் 1953ம் ஆண்டு தைமாதம் தனது தாய் நாட்டிற்கு ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று வந்தார். இவரிடம் ஆங்கிலம் கற்றவர்களில் இவரைவிட வயதில் மூத்தவர்களும் இருந்தனர். 1958/1959ம் வருடம் போட்டிப் பரீட்சைமுலம் கணிதபாடப் பயிற்சிக்காகப் பலாலி ஆசிரிய கலாசாலைக்குத் தெரிவானார்.

தந்தைவழி மாமியாரின் மகனான திரு.சதாசிவம் அவர்களைத் திருமணம் காதலர்போல் இல்லறவாழ்வு இனிதே அமைந்தது. நயினாதீவு மகாவித்தியாலயத்தில் கணிதபாட ஆசிரியராகச் சேவை செய்த போது இவரிடம் கற்ற பல மாணவர்கள் கணித பாடத்தில் விசேட சித்திகளைப் பெற்று மேற்படிப்பைத் தொடர வெளியூர்ப் பாடசாலைகளுக்குச் சென்றனர். பாடசாலை இணைப் பாடவிதாசை செயற்பாட்டில் செயல் செயல்திறன்மிக்க நல்ல வாண்மையுள்ள ஆசிரியராக செயலில் துறவுடனும் அந்தரங்கச் சுத்தியுடனும் தனது ஆசிரிய சேவையினைச் சுமார் 20 வருடங்கள் சேவை செய்து பணி ஓய்வு பெற்றுத் தலைநகரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் செய்த தவப்பயனாலும், கல்வித் தோண்டினாலும் ஆறு பிள்ளைகளும் வெளிநாட்டில் வாழ்வதனால் முதுமைக்காலத்தில் இனபந்துக்களுடன் வாழவேண்டியது அவசியமாகின்றது. மனநின்மதியுடனும் ஆன்ம திருப்தியுடனும் வாழ பிள்ளைகளுடன் இணைவது சாலப் பொருத்தமானதே.

இவர்கள் 25/04/2013ல் தங்களது மகன் திரு.சிவாதரன் கலையரசி தம்பதிகளினால் கனடா நாட்டிற்கு அழைக்கப்பட்டு செல்லவிருக்கின்றனர். இவர்கள் குடும்பத்தினருக்கு நயினை நாகபூஷணித்தாய் எதிர்காலத்தில் சகல சௌபாக்கியங்களையும் நல்க வேண்டுமென எமது மணிபல்லவ கலா மன்றம் இறைஞ்சி நிற்கின்றது.

இ.சிவபாதசேகரம் - தலைவர் | சி.இரத்தினசபாபதி - செயலாளர்
ப.க.பரமலிங்கம் - பொருளாளர் | பொ.திருச்செல்வம் - காப்பாளர்