
Full Name | : திரு. பா. காசிநாதன் |
---|---|
Title | : JP ( All ceylon) |
Born | : 17/09/1952 |
Native | : நயினாதீவு |
Residence | : யாழ்ப்பாணம் |
Occupation | : ஆசிரியர் |
Education | : |
Awards | : |
Spouse | : திருமதி. கமலா காசிநாதன் |
Website | : |
ஆசிரியப் பணியில் வெள்ளி விழா நிறைவில்
ஆசிரிய நண்பர்களால் “காசி” என அன்பாக அழைக்கபடும் பாலசுந்தரம் காசி நாதன் அவர்கள் தமது ஆசிரிய சேவையில் வெள்ளி விழாக் காணும் நாயர்களாகிய செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. முதலில் எமது கல்லூரியில் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி தொடரும் அவரின் சேவைக்கு இறைவனின் ஆசி வேண்டி அவர்பணி தொடர வாழ்த்துகிறோம்.
காலஞ்சென்ற பாலசுந்தரம்பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரின் ஒரேயொரு தவப்புதல்வனாகாப் பிறந்த திரு.பாலசுந்தரம் காசிநாதன் அவர்கள் வரலாற்றுப் புகழ் பெற்ற நயினாதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டவர்.
நயினாதீவு நாகபூசணி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும். நயினாதீவு மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்விவையும், யாழ்பாணம் வைதீஸ்வராக் கல்லூரியில் உயர் நிலைக் கல்வியையும் கற்றவர். 1991 ஆம் ஆண்டில் பேராதனை வெளிவாரிப் பட்டதாரியான இவர் 1995 இல் மகரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டபடிப்பு கல்வி டிப்ளோமாவில் சிறப்பு தேர்சியையும், 2005 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுகலைமானியையும், 2008 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைமானியையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுகலைமானிப்பட்டத்தையும் சித்தார்ந்த பண்டிதர் , சைவப்புலவர் பரீட்சைகளில் சித்தியும் பெற்றவராவார்.
ஆரம்பத்தில் 1977 இல் கொழும்பு தெமட்டகொட தேவபால கல்லூரியில் ஆசிரியராகச் சேவையிலினைந்தவார், 1980 இல் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சியைமுடித்து, 1983 இல் எமது கல்லூரியில் நிர்வாக முகாமைத்துவத்தில் புகழ் பெற்று விளங்கிய கலஞ்சென்ற அதிபர் ஆனந்தராஜா அவர்களால் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக உள்வாங்கப்பட்டார். முதலில் கல்லூரியின் ஆரம்பபிரிவு ஆசிரியராகவும், மத்திய பிரிவு, கனிஷ்டபிரிவு, இடைநிலைப்பிரிவு வகுப்புக்களில் அரசியல், தமில் பாட நெறிகளைக் கற்பித்தும் வருகின்றார்.
கல்லூரியின் தமிழ் மன்றப் பொறுப்பாசிரியர்களாகவும்,ஜோண்சன் இல்லப் பொறுப்பாசிரியராகவும், கல்லூரி ஆசிரிய மன்றச் செயலாளராகவும், சிற்றுண்டிச்சாலை நிர்வாகக்குழு உறுப்பினராகவும், கடன்வழங்கும் திருச்சபையின் உறுப்பினராகவும் இருக்கும் இவர் இந்து மன்றச் செயற்பாடுகளிலும் பங்குகொண்டுவருபவராவார்.
எழுதாற்றலும் நாவன்மையும் கொண்ட இவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் பங்குகொண்டு வருவதோடு தமது கற்பித்தல் பாடநெறி சார்ந்த நூல்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காகவும் எழுதி வருகிறார். இவற்றில் இலக்கணத் தோறல், நாலடியார் இலகு தமிழ், மொழித்திறன் விருத்தி, பாலர் கல்வியும் விஞ்ஞான அணுகுமுறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அவருடைய கல்விப்பணி, கல்லூரிக்குப் புறத்தே சமூகப் பணியாகவும் விரிவடைந்திருப்பதை கடந்த 24 வருடங்களாக யாழ் பாலர் கல்விக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடலாம். ஆட்சிக்குழு உறுப்பினராக,உபதலைவராகத்,இப்போது தலைவராகத் தொடந்தும் அவரது சேவை நீடிக்கின்றது. அத்துடன் 16 ஞானக்குழந்தைகள் இல்லங்களை ஒன்றினைந்த கழகத்தின் தற்போதைய தலைவராகவும் நற்பணியாற்றி வருகின்றார்.
எமது வெள்ளி விழாக்காணும் ஆசான்களைப் அவர் துணைவியார் திருமதி. கமலா காசிநாதன் அவர்கள், பயிற்றப்பட்ட ஆசிரியராக இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலையில் கற்பித்து வருகின்றார். நயினை அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட இத் தம்பதியருக்கு நான்கு செல்வங்களகும். மகன் எமது கல்லூரியில் கற்று ரஷ்யாவில் மருத்துவக் கற்கைநெறியை முடித்தவராவார். மகள் ரோஜிதா பொருளியல் சிறப்பு பட்டதாரியாவார். தக்க்ஷிகா இதழியல் டிப்ளோமா பட்டதாரி. கடைசி மகள் ருக்க்ஷிகா கல்வியல் கல்லூரிக்குள் நுழையவிருக்கின்றார்.
நயினை அம்மன் மீது அளவில்லாப் பற்றுக்கொண்டவர். ஊதியத்திற்காக என்றல்லாது ஊழியத்திற்காக என ஆசிரிய வாண்மை வழி பணியாற்றி வருபவர். எந்நிலையிலும் தன்னை விளம்பரப்படுத்தாது பணிவோடும் அன்போடும் ஆசிரிய சமூகத்தில் உலாவரும் ஆசான். காசி Sir என அன்போடு மாணவர்கள் அழைத்து ஆசீபெறும் பக்குவத்தையுடைய எங்கள் ஆசிரியரின் பணி மேலும், மேலும் சிறப்புற்று மேன்மையுற அவரையும் அவர்தம் குடும்பத்தினரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
வே.யுகபாலசிங்கம்