
Full Name | : சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு |
---|---|
Title | : |
Born | : 26/12/1935 |
Native | : |
Residence | : |
Occupation | : |
Education | : |
Awards | : |
Spouse | : |
Website | : |
நயினாதீவு சங்கரப்பிள்ளை சிவகாமிப் பிள்ளை தம்பதிகளின் மூத்தமகனாக 26.12.1935ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை நயினாதீவில் நாகபூஷணி வித்தியாசாலை நயினாதீவு மகா வித்தியாலயங்களில் கல்வி கற்று தனது இருபதாவது வயதில் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டார். 15 வருடங்கள் சேவையின் பின் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். பயணப் படகு உரிமையார் சங்கத்தின் தலைவராகவிருந்து 7 ஆண்டுகள் சேவையாற்றினார். இறுப்பிட்டி நயினாதீவு படகுச் சேவையை குறி கட்டுவான் துறைமுகத்துக்கு மாற்றியது இவரது பெருமுயற்சியாகும். சிறந்த கரப்பந்தாட்ட வீரர் ஆவார்.
நயினை ஸ்ரீநாகபூஷணி அம்பாள் அறங்காவலராகவும், தலைவராகவும், ஸ்ரீவீரபத்திரர் ஆலய அறங்காவராகவும் உபதலைவராகவும் சேவையாற்றி வருகின்றார்.
நயினாதீவு வடக்கு கிராம முன்னேற்ற சங்கத் தலைவர், செயலர், பொருளாளர் போன்ற பதவிகளை காலத்திற்கு காலம் வகித்துள்ளதோடு நயினாதீவு முத்தமிழ்ச் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவுமிருந்துள்ளார். நயினாதீவு பிரஜைகள் குழுவின்
தலைவராகவிருந்த இவர். 1983ஆம் ஆண்டிலிருந்து 18 வருடங்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். 2003ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சமாதான நீதவானாகப் பதவியேற்றார். பிரசைகள் குழு தலைவராகச் சேவை செய்து மக்களுக்கு உதவியவர்.
மணிபல்லவ கலாமன்றத்தால் அம்பாள் ஆலயத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்ட நாவலர் சிலையின் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்து சிறப்புற அமைய உதவினார். இவர் ஆரோக்கியமாக வாழப் பிரார்த்திக்கின்றோம்.