Mr. Sinnakutdi Sithamparanathan

Full Name: சின்னக்குட்டி சிதம்பரநாதன்
Born: 09/04/1938
Native: Nainativu
Residence: Colombo
Occupation: Inspector of Police
Education:
Awards:
Spouse:
Children:
Website:

சின்னக்குட்டி தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனாக 09.04.1938ஆம் வருடம் பிறந்த இவர். தனது ஆரம்பக் கல்வியையும் உயர்கல்வியையும் யாழ் மத்திய கல்லூரியில் பெற்றார். சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் சித்தியடைந்த இவர் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டார்.

கொழும்பு 7இல் உள்ள குற்றப் புலனாய்வு நுண்கலைக் கருமபீடக் கிளையில் கடமையாற்றி பொலிஸ் பரிசோதகராக (Inspector of Police) பதவி உயர்வு பெற்றார். கைரேகை பிரிவில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். களுத்துறையில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரியில் போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 05.12.1990இல் சேவையிலிருந்து இளைப்பாறிய பின் பல வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், எம் கிராமத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பினை தொடர்ந்து ஆற்றி வருகின்றார்.

சிறந்த விளையாட்டு வீரர் சமூக சேவையாளராக விளங்கும் இவர் நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவர்.

Hony. Vice. President
Nainatheevu - Socio Economic Education & Cultural Development Society

Rect. Inspector of Police