Mr. Velupillai Karunakaran

Full Name: வேலுப்பிள்ளை கருணாகரன்
Born: 17/11/1939
Native:
Residence:
Occupation:
Education:
Awards:
Spouse:
Children:
Website:

நயினாதீவில் சிறந்த வர்த்தகராக விளங்கிய இரகுநாதர் வேலுப்பிள்ளை. வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதியினரின் மகனாக 17.11.1939ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இலங்கை சிறாப்பர் சேவையில் இணைந்து சுங்கத் திணைக்களம் புகையிரத திணைக்களம் ஓய்வூதியத்தினைக்களம் ஆகியவற்றில் பிரதம சிறாப்பராக இருந்து இளைப்பாறியுள்ளனார். இளைப்பாறிய பின் மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் வடபிராந்திய ஏக விநியோகத்தராகவும், மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளராகவும் திகழ்வதோடு எம்மக்களுக்கு தன்னால் ஆன சேவையை ஆற்றி வருகின்றார்.

சிறந்த விளையாட்டு வீரராகவும் குறிப்பாக உதைப்பந்தாட்ட வீரராகவுமிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். நயினாதீவு ஐக்கிய வாலிப முன்னணி நடாத்திய விளையாட்டுப் போட்டிகளை முன்னின்று நடாத்தி தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி இவரை நீதிச் சேவை அமைச்சு கொழும்பு மாவட்ட சமாதான நீதிவனாக நியமித்துள்ளது.

Retd. Chief Shroff
Customs

Hony. Vice. President
Nainatheevu - Socio Economic Education & Cultural Development Society