அலைகடல் நடுவினில் அமர்ந்த எம் தாயே
ஆட்சி புரிந்தெம்மை ஆள்பவள் நீயே
-அலைகடல்
நீழ்வானம் உந்தன் குடை
தீராது உந்தன் கொடை
உனைக்கான நீங்கும் தடை
நீ தானே வாழ்வின் விடை!
எழில் கொஞ்சும் உந்தன் நடை
ஒளி சிந்தும் வானின் பிறை
அருளெங்கும் பெய்யும் மழை
நனைந்தாலே தீரும் வினை!
பூலோக நாயகியே-
புவனேஸ்வரி நீயே
கடற்கரை தீவினில் இருப்பவளே
திருவடி பணிகிறோம் அருள்பவளே!
உனைவிட தெய்வமே இல்லையே
கரிசனமே தா
தரிசனமே தா
நிதர்சனமே
-அலைகடல்
காலத்தை மாற்றும் விதி
தாயேஉன் காந்த விழி
தேகத்தை நாடும்பிணி
உனை காண ஒடும் இனி!
தீபத்தில் ஏற்றும் ஒளி
தீமைகள் தீர்க்கும் வழி
உன் கோவில் வந்தோமடி
நம்பிக்கை நீதானடி
பூலோக நாயகியே
புவனேஸ்வரி நீயே
கலியுக தெய்வமே கலங்கரையே
கைதொழும் தெய்வமே மறைமகளே
இனியொரு பிறவியில் நயினையில்
உனக்கெனவே நான்
பிறந்திடவே நீ
வரமருள்வாய்
-அலைகடல்
Warning: Some outside content may appear