Warning: Some outside content may appear

தாயே நயினை நாகபூஷணியே - எங்கள் தாயே உலகை ஆளும் ஈஸ்வரியே

தாயே நயினை நாகபூஷணியே - எங்கள்
தாயே உலகை ஆளும் ஈஸ்வரியே
எங்கும் பச்சை வண்ணமாய் பக்தர்களின் கூட்டமே!
பக்தர்களின் தோள்களில் உன்னழகின் ஆட்டமே!
அன்னையவள் அருளின் மழையிலே
மனம் நனைந்திடவே !


சாமரங்கள் தோரணங்கள்
நாகினியே உனக்கெனத்தான்!
காவடிகள் தீச்சட்டிகள்
பூஷணியே உனக்கெனத்தான்!


சாம்பவி பைரவி ஈஸ்வரி வாசினி
கோகுல ரூபினி உன்னுருவே!
சாந்தவி மாதங்கி ஷங்கர காசினி
சாயகி யாவுமே உன்னழகே!


பார்த்ததும் கல்நெஞ்சம் கரைகின்ற கோலம்
கவலைகள் பறந்தோடும் நீ செய்யும் ஜாலம்


நான்மறை வேதங்கள் நீயாகி நின்றாய்!
மந்திர ஒலியாக என் நாவில் வந்தாய்


பரிவாரமாக நீ தோண்றினாயே
தனித்தீவில் உன்னாட்சி உலகாளும் நாயகியே!
(தாயே)


கார் முகிலாய் வான் மழையாய்
அலை கடலாய் உனையறிந்தோம்!
தாழ் மலராய் பூமகளே
நாகம்மையாய் உனை உணர்ந்தோம்!


அற்புதம் செய்திடும் அன்னையின் பொற்பதம்
எங்களை காத்திடும் பேரருளே!
சற்பமாய் வந்தவள் சங்கடம் தீர்த்தவள்
சரித்திர தீவினில் வாழ்பவளே!


ஆசைகள் வேறில்லை உன் நாமம் சொன்னோம்
ஆறுதல் நீதானே கையேந்தி நின்றோம்


ஆயிரம் தெய்வங்கள் ஊரெங்கும் கண்டோம்
ஆயினும் நாகம்மை உன்வாசல் வந்தோம்!


பல நூறு ஜென்மம் இருந்தாலும் தாயே
உன் தீவில் பிறந்தே தான் உனைக்காண வந்திடுவோம் !
(தாயே)