தம்பி சபாரெத்தினம் சிறிஸ்கந்தராசா அவர்களின் பிரிவுத்துயர்
10வது ஆண்டு நினைவலைகள்
தம்பி சிறியவனின் பிரிவு ஆண்டு பத்து ஆனாலும்
சிறியவனின் நினைவால் வாடுகின்ற மனையாள் மக்களுடன்
அண்ணனவனும் உறவுகளும் ஓயாத நினைவலையாய்
உள்ளமதில் வாழ்கின்றாய் இவ்வுலகில்
நீயவனோ விண்ணுலகில் அன்னையவள் நாகம்மை அருகமர்ந்து
அருள்பெற்று எம்மவர்க்கு ஆறுதல்தர
அலைகடல் மத்தியில் அமைந்திருந்து அகிலமெல்லாம்
அருள்பாலிக்கும் நயினை நாகபூஷணியை வேண்டுகின்றோம்
மனிதருள் மாணிக்கமாய் அன்பு நிறைந்த பேரொளியாய்
எல்லோருக்கும் நல்லவராய் உயர்வான பண்பாளராய்
அன்புடனும் பண்புடனும் பணிவுடனும் நாம்வாழ
அறிவுரைகள் பல கூறி இன்சொல்பேசி உறவினர்களை
அரவணைத்து வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்று
வானுறைந்து தெய்வமாகிவிட்ட எமது குடும்பச்சுடர்
சபாரெத்தினம் சிறிகாந்தராசா அவர்களை நினைவுகூரும்.
மனைவி, மக்கள் அண்ணர்
குடும்பத்தினர்
SRI LANKA