எமது அன்புத் தெய்வம் பொன்னம்பலம் திருநாவுக்கரசு
அவர்களின் அமரத்துவ 5ஆம் ஆண்டு நினைவுத் தினம் 01/03/2008
அன்பதனைச் சொரிந்து
அருகிருந்து ஆதரித்து அளவிலா
இன்பமாய் இதமுடன்
எம்மோடுபேசித்
துன்பமெல்லாம் -போக்கி
துணையிருந்து துயர்துடைத்து
எமை அவையத்தில் முன்னேற்றி
வையகத்தில் வாழ்வாங்கு
வாழவைத்த தெய்வத்தைச்
சாந்திபெற வானுறையும்
தெய்வத்தையெல்லாம்
வேண்டிதொழுகின்றோம்
சாந்தி சாந்தி சாந்தி.
மனைவி மக்கள் குடும்பத்தார்