அமரர் முத்தையா ஞானேஸ்வரி

நயீனாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா ஞானேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி தாயாக வந்தெம்மைத் தாங்கி கருத்தரித்து    சேயாக எமை ஈன்று பாலுட்டி சீராட்டி நோய் ஏதும் தீண்டாது தூணாகி எமை காத்து    ஆளாகி நாம் எழவே ஆயிரமாம் தொல்லைகளை நீர் சுமந்து நின்றீரே ! வைய்யகத்தில் உள்ளவரை வாழ்வாங்கு நாம் வாழ    தெய்வமாய் துணையிருப்பீர் என்றிருந்தோம் எமையெல்லாம் இடைநடுவில் தவிக்கவிட்டு    எங்கு சென்று விட்டிர்கள் அம்மா மாமி மாமி என்று வாய்நிறைய கூப்பிட்டோம்   மருமக்கள் நீங்களும் என் பிள்ளைகள் தான் என்றுரைத்து பாதியில் எங்களை பரிதவிக்க விட்டு விட்டு    எங்கு சென்றீர்கள் மாமி அப்பம்மா, அம்மம்மா பூட்டி என்று பாசமழை பொழிந்தோம்    பார் போற்றும் பேரப்பிள்ளைகளாய் எங்களை ஆளாக்கி விட்டு விட்டு அவசரமாய் சென்றதும் ஏனோ? நீங்கள் மறைந்து ஓராண்டுகள் சென்றாலும் உங்கள் நினைவலைகள்    என்றென்றும் பசுமையாக எங்கள் இதயத்துள் பதித்து இருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் தாயின் தாய்    தில்லைவெளி பிடாரி அம்பாளை வேண்டுகின்றோம். ஒம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

Similar events